By April 25, 20180 CommentsReport

செக்க சிவந்த வானம்: களத்தில் விஜய் சேதுபதி..!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் செக்க சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துவரும் படம் செக்க சிவந்த வானம். சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய்,ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, டயானா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு சென்னை பகுதிகளில் நடைபெற்றது. இதில் சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய், அதிதி ராவ் ஆகியோரின் படப்பிடிப்பு காட்சிகள் நடைபெற்றுவந்தன. விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பில் உருவாகிவரும் ஜுங்கா படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் மணிரத்னம் படத்தில் இணைய முடியவில்லை.

இதற்கிடையே தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றதால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டன. ஆனால் சிறப்பு அனுமதி பெற்று ஜுங்கா படத்தின் வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு காட்சிகளை முடித்தார் விஜய் சேதுபதி.

இதனையடுத்து தற்போது செக்க சிவந்த வானம் படக்குழுவில் இணைந்துள்ளார் விஜய் சேதுபதி. இதன் படப்பிடிப்பு இன்று (ஏப்ரல் 25) சென்னையில் துவங்கி நடைபெற்றுவருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியை மேற்கொள்கிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், லைகா புரொடக்‌ஷனுடன் இணைந்து தயாரிக்கின்றது.


Post a Comment

CAPTCHA
Refresh

*