By April 25, 20180 CommentsReport

ஆக்‌ஷன் சொல்ல ரெடியான இசையமைப்பாளர்..!!

கௌதம் மேனன் இயக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பு பெற, யார் இசையமைப்பாளர் என்பதை மட்டும் கௌதம் அறிவிக்காமல் இருந்தார். மிஸ்டர் எக்ஸ் என்று குறிப்பிட்டு வந்த அவர் ஒரு கட்டத்தில் தர்புகா சிவாதான் இசையமைப்பாளர் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

ராஜதந்திரம் படத்தில் நகைச்சுவை நடிகராக வந்த தர்புகா சிவாதான் இசையமைப்பாளரா என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். ஏனென்றால் ‘மறுவார்த்தை பேசாதே’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. ஒரு அறிமுக இசையமைப்பாளரின் பாடல் முன்னணி இசையமைப்பாளர்களோடு போட்டி போடும் அளவுக்கு இருந்ததே அந்த ஆச்சர்யத்திற்கான காரணம். அந்த ஆச்சர்யம் அடங்குவதற்குள் மற்றொரு பாதையைத் தேர்வு செய்து சிவா நடக்கத் தொடங்கியுள்ளார்.

நடிகர், இசையமைப்பாளர் என வலம்வரும் சிவா தற்போது இயக்குநராக ‘ஆக்‌ஷன்’ சொல்ல தயாராகியிருக்கிறார். உறியடி படத்தைத் தயாரித்த சமீர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். திரைக்கதையை முடித்துள்ள சிவா தற்போது நடிகர்களைத் தேர்வு செய்துவருகிறார். பெரும்பாலும் புதுமுகங்களை நடிக்கவைக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

பட இயக்கத்தில் நண்பர்களோடு பங்கு பெற்றிருந்ததால் அவருக்கு இந்தத் துறையில் பரிச்சயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இசையமைப்பு பணியிலும் அவர் தொடர்ந்து ஈடுபட உள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*