By April 25, 20180 CommentsReport

புதிய சாதனை படைத்த தீபிகா..!!

பாலிவுட் பிரபலம் தீபிகா படுகோனின் திறமைக்குப் பரிசாக அவருக்கு மீண்டும் ஓர் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

திரையுலகிற்குள் காலடி எடுத்துவைத்த குறுகிய காலத்திலேயே உலகளவில் புகழ் பெற்றவர் தீபிகா படுகோன். 30 வயதைக் கடந்த தீபிகா படுகோன் பெங்களூருவில் பிறந்தவர். 2007ஆம் ஆண்டு ஷாருக் கானோடு ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானவர். அவர் நடித்த பல்வேறு படங்கள் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனையை அடைந்தன. மேலும் அவர் சொந்தமாக ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தையும் நடத்திவருகிறார். தற்போது இந்திய படங்களில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் படங்களிலும் தன்னை முன்னெடுத்துச் செல்கிறார்.

சமீபத்தில் வெளியான பத்மாவத் திரைப்படத்தின் மூலம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த இவர் அப்படத்திற்காக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தும் கலங்காமல் தைரியமாக இருந்தார். பாலிவுட்டில் ‘குயின் ஆஃப் 100 க்ரோர்ஸ்’ என்று அழைக்கப்படும் இவருக்காக தற்போது பல படங்கள் காத்திருக்கின்றன. இதனை நிரூபிக்கும் வகையில் இவரது சமீபத்திய திரைப்படமான பத்மாவத் 300 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இவரை கௌரவிக்கும் வகையில் டிங்ஸ் (TINGS) லண்டன் பத்திரிகை இவரது புகைப்படத்தினை அட்டைப்படமாகப் பயன்படுத்தியுள்ளது. டிங்ஸ் (TINGS) பத்திரிகையின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற முதல் இந்திய நடிகை என்னும் பெருமையினை இதன்மூலம் தீபிகா பெற்றுள்ளார்


Post a Comment

CAPTCHA
Refresh

*