By April 25, 20180 CommentsReport

முக்தாவின் புதிய முயற்சி ..!!

திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து அழகு நிலையம் ஒன்றை ஆரம்பித்துள்ளார் நடிகை முக்தா பானு.

நடிகைகள் திரைத் துறையைத் தாண்டி அழகு நிலையம், ரியல் எஸ்டேட் , பொடீக் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கு பட வாய்ப்புகள் குறைந்துவருவதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஒருசிலர் திரைத் துறையை விட்டு அகலாமல் தயாரிப்பாளராகி விடுகின்றனர். உதாரணமாக, சமீபத்தில் நடிகை சதா திரைப்பட வாய்ப்பு இல்லாததால் தயாரிப்பாளராகும் பணியை மேற்கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால், தமன்னா ஆகியோரைத் தொடர்ந்து நடிகை முக்தா பானு படங்களில் நடிப்பதைத் தாண்டி சொந்தமாக தொழில் ஒன்றையும் செய்துவருகிறார். இவர் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து அழகர் மலை, மூன்று பேர் மூன்று காதல், பாம்புச் சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் தற்போது திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து இவர், முக்தா ஃபேஷியல் கேர் என்ற பெயரில் முகம் அழகுப்படுத்தும் வேலையைச் செய்துவருகிறார்.

இது குறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “தனக்குப் பிடித்தமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி; மற்றவர்களை அழகு படுத்துவதன் மூலம் என் மனமும் நாளுக்கு நாள் அழகாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் சித்தார்த் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஆதிரா என்ற மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*