By April 25, 20180 CommentsReport

சதுரங்க வேட்டை நாயகிக்குத் திருமணம்..!!

இஷாரா என்று சொன்னதும் நான்கு வருடங்களுக்கு முன்பு மேடையில் பார்த்தது அப்படியே நினைவுக்கு வருகிறது. வெண்மேகம், பப்பாளி போன்ற படங்களில் ஏற்கெனவே அறிமுகமாகி இருந்தாலும், சதுரங்க வேட்டை திரைப்படம் இஷாராவுக்கு ஒரு கேம் சேஞ்சர் என்று சொல்லலாம்.

அதிவேக திரைக்கதை கொண்ட சதுரங்க வேட்டை திரைப்படம் சென்று சேர்ந்தது போலவே, இஷாராவும் அனைவருக்கும் தெரியும் முகமாக மாறினார். அதிலும் சதுரங்க வேட்டை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மேடையேறி, அவர் தமிழில் பேசிய விதம் பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது. வழக்கமாக கேரளாவிலிருந்து தமிழில் நடிக்க வரும் நடிகைகள் தமிழில் பேசுவதில்லை என்பதையெல்லாம் அந்த மேடையிலேயே உடைத்தார்.

தமிழிலும் டப்பிங் பேசி நடிக்கக்கூடிய ஒரு நடிகை தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துவிட்டார் என்றே அந்த நாளில் அவருக்குப் புகழ் கிடைத்தது. இப்போது திருமண பந்தத்தில் இணைந்து அந்த சினிமாவிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டிருக்கிறார். இந்தியாவிலிருந்து சென்று துபாயில் செட்டிலான சஹில் என்பவரை குடும்பத்தினர் சூழ திருமணம் செய்துகொண்டதாக இஷாரா தரப்பிலிருந்து கூறியிருக்கிறார்கள்.

இஷாரா நடிப்பில் உருவான ‘பப்பரப்பாம்’ என்ற திரைப்படம் மட்டும் ரிலீஸுக்குக் காத்திருக்கும் நிலையில் அவர் திருமணத்தை முடித்துக்கொண்டுவிட்டார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*