By April 25, 20180 CommentsReport

நான்கு கதாநாயகிகள் டிரெண்ட்..!!

துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நான்கு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.

தமிழில் வாயை மூடிப் பேசவும், ஓகே கண்மணி, சோலோ ஆகிய படங்களைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடித்துவரும் திரைப்படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிது வர்மா கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் துல்கர் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

சோலோ திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தன்ஷிகா, ஸ்ருதி ஹரிகரன், நேகா ஷர்மா, ஆர்த்தி வெங்கடேஷ் என நான்கு கதாநாயகிகள் நடித்திருந்தனர். அந்தப் படத்தைப் போலவே இதிலும் நான்கு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். நிவேதா பெத்துராஜ், ஷாலினி பாண்டே இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு கதாநாயகிகளைத் தேடி வருகின்றனர்.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். துல்கர் சல்மான் நடித்துள்ள ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் மே 9ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது


Post a Comment

CAPTCHA
Refresh

*