By April 25, 20180 CommentsReport

ரன்பீர் கபூர் கொடுத்த அதிர்ச்சி..!! (வீடியோ)

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ‘சஞ்சு’ படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றுவருகிறது.

சஞ்சய் தத் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் அனுஷ்கா ஷர்மா, தியா மிர்ஸா, சோனம் கபூர், மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர்.

பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த சஞ்சய் தத்தின் வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்கள் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. இள வயது முதல் தற்போது வரை சஞ்சய் தத்தின் முகம், உடல் பாவனைகளோடு ரன்பீர் கபூர் அழகாகப் பொருந்திப் போயுள்ளார். டீசரின் முதல் காட்சியிலேயே சஞ்சய் தத் சிறையில் இருந்து வெளியில் வருவது காட்டப்படுகிறது. டீசரே படம் பற்றிய எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை வினோத் சோப்ரா ஃபிலிம்ஸ், ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவருகின்றன. ஜூன் 29ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*