By April 26, 20180 CommentsReport

வித்யா: வரிசை கட்டும் படங்கள்..!!

சைவம் திரைப்படம் மூலம் திரைத் துறையில் அறிமுகமான வித்யா பிரதீப் அடுத்தடுத்து சில படங்களில் நடித்தாலும் போதிய கவனம் பெறாமல் இருந்தார். அவரது திரைப் பயணத்தில் பரபரப்பான காலகட்டத்தில் தற்போது உள்ளார். வித்யா தற்போது அடுத்தடுத்து நான்கு படங்களில் ஒப்பந்தமாகி ஒரே நேரத்தில் நடித்துவருகிறார்.

தடையற தாக்க படத்திற்குப் பின் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துவரும் படம் தடம். மகிழ் திருமேனி இயக்கத்தில் தெலுங்கு, கன்னட திரையுலகில் வலம்வரும் தன்யா ஹோப் இந்தப் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக நடிக்கிறார். இதில் வித்யா பிரதீப் காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் ஆக்‌ஷன் காட்சிகள் ஏதும் அவருக்கு இல்லை.

தடம் திரைப்படம் தவிர்த்து அவர் அருள்நிதி நடிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார். கிருஷ்ணா நடிக்கும் களரி படத்தில் அழகுக்கலை நிபுணராக நடிக்கிறார். அதர்வா நடிக்கும் ஒத்தைக்கு ஒத்தை திரைப்படம் சேலம் வட்டாரத்தைப் பின்புலமாகக் கொண்டு தயாராகிவருகிறது. இதில் கல்லூரிப் பெண்ணாக வித்யா நடித்துவருகிறார். இந்தப் படங்கள் பெரும்பாலும் இந்த ஆண்டு வெளியாகிவிடும் என்பதால் வித்யாவுக்கு இதன் மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*