By April 26, 20180 CommentsReport

பேயாக மாறும் சாந்தினி..!!

புதுமுக இயக்குநர் ஆர்.வி.சுரேஷ் இயக்கத்தில் உருவாகும் ஹாரர் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை சாந்தினி.

சினிமாவைப் பொறுத்தவரை என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அது ஹாரர் படங்கள்தான். குறைந்தபட்ச வெற்றியையும் ஹாரர் படங்கள் பெற்றுத்தருவதால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ஹாரர் படங்களையே பெரிதும் விரும்புகின்றனர். அந்த வகையில் அறிமுக இயக்குநர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் த்ரில்லர் படத்துக்கு ‘ஐல என்கிற ஐஸ்வர்ய லட்சுமி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை ரியங்கா பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தம்பி உன்னிகிருஷ்ணன், ஜே.ரவீந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். எமன் படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் மற்றும் திலீபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் சகோதரர்களான டி.ஆர்.கிருஷ்ண சேத்தன் இசையமைப்பாளராகவும், டி.ஆர்.பிரவீன் படத்தொகுப்பாளராகவும் அறிமுகமாகிறார்கள். ஹேமந்த் இந்தப் படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிச்சைக்காரன், சலீம் படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றிய ஆனந்த் மணியும் இந்தப் படத்தில் பணியாற்றவுள்ளார்.

விரைவில் தொடங்கவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மேலும் இதில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*