By April 26, 20180 CommentsReport

மூன்று நாள்களுக்குக் காத்திருந்த 48 நாள்கள்..!!

கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கார்த்தி – பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகிவரும் படம் கடைக்குட்டி சிங்கம். சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2D என்டர்டெயின்மென்ட்’ மூலம் தயாரிக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக சாயீஷா, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர்.

விவசாயத்தின் முக்கியத்துவத்தை ஆழமாகப் பேசவிருக்கும் இதன் படப்பிடிப்பு தென்காசி, காரைக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நடைபெற்றது. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கும்போது தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தப் போராட்டத்தால் முடிவடையாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது போராட்டம் முடிவடைந்து படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியிருக்கின்றன. மூன்று நாள்களுக்கான படப்பிடிப்பே மீதமிருந்த நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்திற்காக ஆதரவு தெரிவித்திருந்த கார்த்தி, 48 நாள்களுக்குப் பிறகு மீண்டும் தனது படப்பிடிப்பைத் தொடங்கி முடித்துள்ளார். இறுதி நாளான நேற்று (ஏப்ரல் 23) கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் படக்குழுவினர்.

டி.இமான் இசையமைத்துவரும் இதற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இறுதிக்கட்ட பணிகளை விரைவில் தொடங்க உள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*