By April 26, 20180 CommentsReport

அக்‌ஷய் படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு..!!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தற்போது நடித்துவரும் ‘கேசரி’ படப்பிடிப்பில் குண்டு வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழில் ரஜினிக்கு வில்லனாக ‘2.O’ படத்தில் நடித்திருக்கும் அக்‌ஷய் குமார், தற்போது பாலிவுட்டில் கேசரி என்ற படத்தில் நடித்துவருகிறார்.இதன் படப்பிடிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துவந்தது. புனே அருகில் சதாரா மலைப்பிரதேசத்தில் உள்ள புத்ருக் கிராமத்தில் நடந்த படப்பிடிப்பில் அக்‌ஷய் குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு காட்சிகளை எடுக்கவிருந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் திடீரென தீப்பிடித்தது. படத்தின் சண்டைக் காட்சியின்போது வெடித்த குண்டு காரணமாக தீ பரவியதாகக் கூறப்படுகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் செலவில் போட்டிருந்த பிரம்மாண்டமான செட் முற்றிலும் கருகி நாசமானது. வேகமாகப் பரவிய தீயை பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இன்னும் 10 நாட்களுக்கான படப்பிடிப்பு காட்சிகள் எடுக்கப்படவிருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் படக்குழுவினர் காயமின்றித் தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*