By April 26, 20180 CommentsReport

திருமணம்: மனம் திறந்த கவுசல்யா..!!

விஜய், பிரபுதேவா, கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை கவுசல்யா தற்போது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ்ப் பட உலகில் 90களில் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்த வந்தவர் நடிகை கவுசல்யா. பெங்களூருவைச் சேர்ந்த இவர் காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பிரியமுடன், சொல்லாமலே, பூவேலி, உன்னுடன், ஏழையின் சிரிப்பில், வானத்தைப்போல, மனதைத் திருடிவிட்டாய் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார். இறுதியாக தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இது தவிர மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். 38 வயதாகும் கவுசல்யா திரைப்படங்களில் அக்கா, அண்ணி வேடங்களிலும் விளம்பரங்களிலும் தொடர்ந்து நடித்துவருகிறார்.

நக்மா, தபு, பூஜாகுமார், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்துவருகின்றனர். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும் இது போன்ற நடிகர், நடிகைகளிடம் கேட்கும் முதல் கேள்வியே உங்கள் திருமணம் எப்போது என்பதுதான். இது பல நபர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் மலையாளப் படப்பிடிப்பில் கலந்துகொள்ள கேரளா சென்ற கவுசல்யாவிடம், பத்திரிகையாளர் சந்திப்பில், ‘உங்களுடன் நடிக்கவந்த நடிகைகள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது; உங்கள் திருமணம் எப்பொழுது’ என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “நான் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளேன். என் மனதுக்குப் பிடித்த ஒருவரை மணக்க இருக்கிறேன். விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*