By April 27, 20180 CommentsReport

படப்பிடிப்புக்கு ரெடியான சாய் பல்லவி..!!

தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் படப்பிடிப்பு பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் நடிக்கும் மாரி 2, சூர்யா நடிக்கும் என்ஜிகே படங்களின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் அதன் கதாநாயகி சாய் பல்லவி படப்பிடிப்பை எதிர்பார்த்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் சாய் பல்லவி அறிமுகமாகும் படமான ‘தியா’ ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இது தவிர சாய் பல்லவி மாரி 2, என்ஜிகே ஆகிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

மாரி 2 படத்துக்காகச் சென்னை பின்னி மில்லில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் சாய் பல்லவி சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து அவர் அடுத்த மாதம் சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பில் இணையவுள்ளார்.

என்ஜிகே படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை சாலிகிராமத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்பாசமுத்திரம் நகரைப் போன்று அரங்கு அமைக்கப்பட்டு நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் ரகுல் ப்ரீத் சிங் கலந்துகொண்டுள்ளார். ரகுல் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்த பிறகு சாய் பல்லவி காட்சிகள் படமாக்கப்படும். இது தவிர, சர்வானந்த் ஜோடியாகத் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவும் சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*