By April 27, 20180 CommentsReport

வெப் சீரிஸில் களமிறங்கும் பிரஜின்.!!

சின்னத்திரை, வெள்ளித்திரையைத் தொடர்ந்து தற்போது வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் பிரஜின்.

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பெரிய திரையில் நடிகர் ஆனவர் பிரஜின். தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்த இவர், தீ குளிக்கும் பச்சை மரம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு சுற்றுலா, மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை படங்களில் நடித்தார். ஆனால், சினிமாவில் அவர் நினைத்த அளவுக்கு வெற்றிபெற முடியவில்லை.

தற்போது சமுத்திரக்கனியுடன் ஆண் தேவதை, குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் போன்ற படங்களில் நடித்துவருகிறார். இது தவிர, சில டிவி தொடர்களிலும் நடித்துவருகிறார். இந்த நிலையில் அவர், ‘போர் வரும்’ என்கிற வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அரசியலைப் பின்னணியாகக்கொண்ட தொடராக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிரஜின் பத்திரிகை நிருபராக நடிக்கிறார்.

இதுகுறித்து சிபி இணையதளத்துக்குப் பேட்டி அளித்துள்ள அவர், “இது அரசியல் நையாண்டியைப் பற்றிப் பேசும் படமா என்று கேட்கிறார்கள். இந்தக் கதைக்களம் ஒரு நிருபர் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த வெப் சீரிஸில் நடிப்பது ஒரு புது அனுபவமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே மாதவன், பாபி சிம்ஹா, நந்தா ஆகியோர் வெப் சீரிஸில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


Post a Comment

CAPTCHA
Refresh

*