By April 27, 20180 CommentsReport

இலங்கை பறக்கும் வைபவ் டீம் ..!!

காட்டேரி’ படத்தின் படப்பிடிப்புக்காகப் படக்குழு இலங்கை செல்ல உள்ளது.

வைபவ் நடித்த மேயாத மான் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் நடித்துள்ள ஆர்.கே.நகர் திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகிவரும் நிலையில் தற்போது ‘காட்டேரி’ படத்தில் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பாஜ்வா மற்றும் மணாலி ரதோட் என நான்கு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காகப் படக்குழு இலங்கை செல்லத் திட்டமிட்டுள்ளது. அங்கு வைபவ் மற்றும் மணாலி ரதோட் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. தெலுங்கு நடிகையான மணாலி ரதோட் காட்டேரி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். நான்கு கதாநாயகிகளுக்கும் சமமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை ‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ படங்களை இயக்கிய டீகே இயக்குகிறார். கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எஸ்.என்.பிரசாத் இசையமைக்க, விக்கி ஒளிப்பதிவு செய்கிறார்.

காமெடி கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*