By April 27, 20180 CommentsReport

பின்வாங்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல்..!!

அரவிந்த்சாமி நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இயக்குநர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். இப்படத்தில் அரவிந்த சாமி மற்றும் அமலா பால் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோர் நடித்துள்ளனர். அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹர்ஷினி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் விநியோக உரிமையை பரதன் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. இந்தப் படம் வெளியீட்டிற்குத் தயாராக இருந்த நேரத்தில் சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதையடுத்து ஏப்ரல் 27ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி மே 11ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ திரைப்படம் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஏப்ரல் 27ஆம் தேதியன்று வெளியாக இருக்கிறது. இதனால் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம், முக்கியமான நகரங்களில் திரையரங்கு பற்றாக்குறை காரணமாகவும், எல்லாப் பகுதி மக்களும் பார்க்க வேண்டுமென்ற நோக்கத்தாலும் மே 11ஆம் தேதியன்று வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*