By April 27, 20180 CommentsReport

காலா: விற்பனையான டிவி ரைட்ஸ்..!!

ரஜினி நடிப்பில் வெளியாகவிருக்கும் காலா படத்தின் முக்கிய உரிமையை முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

கபாலி படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் காலா. தயாரிப்பாளர் தனுஷ் தரப்பில் அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 27ஆம் தேதியன்று எப்படியும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தப் போராட்டத்தால் அது சாத்தியமாகாமல் போனது.

இதற்கிடையே காலா படத்திற்கு தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்தது. தணிக்கை அதிகாரிகள் பல இடங்களில் கட் செய்த பிறகே இந்த சான்றிதழை அளித்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து படத்திற்கு ‘யு’ சான்றிதழ் பெறுவதற்காக மறுதணிக்கைக்கு தயாரிப்பு மற்றும் இயக்குநர் தரப்பில் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் காலா படத்தை ஜூன் 7ஆம் தேதி வெளியிடவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான பணிகளும் துரிதமாகிவருகின்றன. இந்த நிலையில் காலா படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக அந்நிறுவனம் தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதல் முறையாக ரஜினி படத்தை பெரும் விலைக்கு விஜய் டிவி நிறுவனம் வாங்கியிருக்கிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என 4 மொழிகளில் படத்தை வெளியிட லைகா நிறுவனம் திட்டமிட்டுவருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*