By April 28, 20180 CommentsReport

பிரியங்காவின் இத்தாலி அனுபவம்..!!

குவாண்டிகா தொடர் வெளியாவதை முன்னிட்டு பிரியங்கா தனது இத்தாலி அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் பரபரப்பாக இயங்கிவருகிறார். 2015ஆம் ஆண்டிலிருந்து குவாண்டிகா ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் நடித்துவருகிறார் பிரியங்கா சோப்ரா. கடந்த ஆண்டு டிவைன் ஜான்சனுடன் இவர் இணைந்து நடித்த பே வாட்ச் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

குவாண்டிகா தொடரின் மூன்றாவது சீசன் நாளை முதல் இந்தியாவில் ஒளிபரப்பாக உள்ளது. பிரியங்கா இந்தத் தொடரில் அலெக்ஸ் பேரிஷ் என்ற எஃப்பிஐ உளவாளியாக நடித்துள்ளார். தற்போது படப்பிடிப்பின்போது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து பிரியங்கா ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துவருகிறார். இத்தாலியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது அவரது முழங்காலில் அடிபட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “படப்பிடிப்பின்போது எனது முழங்காலில் அடிபட்டது. உடலியல் நிபுணர் என்னுடன் படப்பிடிப்பு தளத்தில் இருந்தார். அடுத்த மூன்று வாரங்கள் வலியுடன் இருந்தேன்” எனக் கூறியுள்ளார்.

படப்பிடிப்பில் இத்தாலியில் இருந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், “நாங்கள் இத்தாலியில் இருந்தபோது, படக்குழுவில் ஒரே ஒரு நடிகை நான் மட்டும்தான். அதனால் நான் இரவில் குழுவினருடன் வெளியே போவேன். நாங்கள் நிறைய டஸ்கன் மதுவை உட்கொண்டோம்” என்று தெரிவித்துள்ளார்


Post a Comment

CAPTCHA
Refresh

*