By April 28, 20180 CommentsReport

விவேக் படத்தில் ‘விவேகம்’ பாடகர்..!!

விவேக் நடிப்பில் உருவாகிவரும் எழுமின் படத்தில் விவேகம் உள்ளிட்ட பல படங்களில் ஓப்பனிங் பாடல்கள் பாடியிருக்கும் யோகி பி பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

விவேக், தேவயானி ஜோடி சேர்ந்திருக்கும் படம் எழுமின். உரு படத்தைத் தயாரித்த வி.பி.விஜி இயக்கிவருகிறார். மேலும் விஜியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வையம் மீடியாஸ் மூலம் தயாரிக்கிறார். கணேஷ் சந்திர சேகரன் இசையமைக்கும் இதற்கு வினோத் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் ராம் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார்.

கராத்தே, சிலம்பம், குங் ஃபூ போன்ற தற்காப்புக் கலைகளில் ஈடுபடும் ஆறு குழந்தைகளை மையமாக வைத்து சமூகக் கருத்துகளை வலியுறுத்தும் படமாக உருவாகிவரும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதில் ஆடுகளம், பொல்லாதவன், விவேகம், டிக் டிக் டிக், காலா போன்ற படங்களில் பாடல் பாடிய ராப் சிங்கர் யோகி பி, கணேஷ் சந்திரசேகரனின் இசையில் பா.விஜய் வரிகளில் எழுமின் படத்தில் எழுச்சிமிகு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

இது குறித்து இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன், “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விவேகம், டிக் டிக் டிக், காலா போன்ற பெரிய படங்களில் பணிபுரிந்த யோகி பி அவர்கள் முதலில் புதிய இசையமைப்பாளர் படத்தில் பாட ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம். அதுவும் நான் அவரை அழைத்ததும் மலேசியாவில் இருந்து இங்கே வந்து என் இசையில் பாடிக்கொடுத்துள்ளார். அது மட்டும் இல்லாது நான் அவருடன் பணிபுரிய முதலில் பயந்தேன். வேலை பார்க்க பார்க்க ஒரு குழந்தை போலவே நடந்துகொண்டார். என்னைப் போன்ற புதிய இசையமைப்பாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது அவருடன் பணிபுரிந்தது” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*