By April 28, 20180 CommentsReport

இரும்புத்திரை வெளியீடு: தடுமாற்றமா, சுயநலமா?..!!

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் தயாரித்து நாயகனாக நடித்திருக்கும் படம் இரும்புத்திரை. இப்படத்தின் தமிழ்நாடு விநியோகஉரிமை 9.50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மார்ச் இறுதியில் இப்படம் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் திரைப்படத் துறையில் டிஜிட்டல் கட்டணம் தொடர்பாக வேலைநிறுத்தம் தொடங்கியது. புதிய படங்கள் திரையிடுவது இதனால் நிறுத்தப்பட்டது. இரும்புத்திரை ரிலீஸும் ஒத்தி வைக்கப்பட்டது.

வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்து தணிக்கைச் சான்றிதழ் தேதியின் அடிப்படையில் படங்கள் வெளியீட்டு நாளைத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தணிக்கைத் தேதி, தயாரிப்பாளர்கள் விரும்பும் தேதி முடிவு செய்து அறிவிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இரும்புத்திரை மே 11 ரிலீஸ் என சமூக வலைதளங்களில் போஸ்டர் வலம் வந்து வைரல் ஆனது. விநியோகஸ்தர்களுக்குள் புரிதல் இல்லாமல் மே 11 ரிலீஸ் என்று தவறுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று 24 மணி நேரம் கழித்து தயாரிப்பாளர் விஷால் அறிவித்தார். அப்போதே தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் சந்தேகத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

தற்போது தயாரிப்பாளர் விஷால் கொடுத்த விண்ணப்பத்தை பரிசீலித்து மே 11 அன்று இரும்புத்திரை படத்தை வெளியிட தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அனுமதிக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*