By April 28, 20180 CommentsReport

மகேஷ் பாபு மகிழ்ச்சிக்கான காரணம்..!!

உலகின் செல்வாக்கான நபர்களின் பட்டியலில் இடம்பெறுவது, தங்களது பணிக்காக விருதுகள் பெறுவது ஆகியவை பிரபலங்களுக்கான முக்கிய கௌரவங்கள். இந்தப் பட்டியலில் மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்படுவதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

பிரபாஸ், சத்யராஜ், ஷாருக் கான், கரண் ஜோஹர், விராட் கோலி ஆகியோரைத் தொடர்ந்து தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபுவுக்கும் மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக அவரது உடல் அளவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை மகேஷ் பாபு அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “மதிப்புமிக்க மேடம் துஸாட்ஸில் இடம்பெறுவதில் மகிழ்ச்சி. கலைஞர்கள் குழுவிற்கு நன்றி, இதை நம்ப முடியவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மகேஷ் பாபு நடிப்பில் `பாரத் அனே நேனு’ படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்நிலையில், இந்த கௌரவம் அவரது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியிருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*