By April 28, 20180 CommentsReport

அரச விழாவில் பிரியங்கா சோப்ரா..!!

ஹாலிவுட் படங்களில் நடித்துவரும் இந்திய நடிகையான பிரியங்கா சோப்ராவுக்கு இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகை மேகன் மார்க்கிலும் காதலித்து வந்தனர். இருவரும் மண வாழ்வில் இணையப்போவதாகக் கூறி, நிச்சயதார்த்தம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இந்த நிலையில் ஹாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துவரும் முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, சக நடிகையும் நெருங்கிய தோழியுமான மேகன் மார்க்கிலுக்கும் இளவரசர் ஹாரிக்கும் வாழ்த்துக் கூறினார். இங்கிலாந்து அரச பரம்பரையில் அடுத்து நடக்கவிருக்கும் பிரமாண்ட திருமண விழாவில், இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா மணப்பெண் தோழியாக பங்கேற்க இருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகின. தற்போது அது உறுதியாகியுள்ளது.

இன்றைய சர்வதேச அடையாளமான பிரியங்கா சோப்ரா உலக நாடுகளில் உள்ள வெகுஜன மக்களிடையே செல்வாக்குள்ள இந்தியர்களில் ஒருவராகவும் உள்ளார். அதனாலேயே அவருக்கு இங்கிலாந்து அரச குடும்பத்தின் திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ள அவர், “இங்கிலாந்து இளவரசர் – மேகன் திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனக்கு மேகனை கடந்த மூன்றாண்டுகளாகத் தெரியும்.

அவரது அறிமுகம் கிடைத்ததில் எனக்குச் சந்தோஷம். மேகனை நான் அறிந்த நாள் முதல், ஓர் அரச குடும்பத்தின் வருங்கால மருமகளாக இந்த உலகம் மேகனை எதிர்கொள்ளும்விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது. இன்றைய உலகின் மிகச் சிறந்த சமூகப் போராளியாகத் திகழும் மேகன், இங்கிலாந்து அரச குடும்பத்துக்கான இளவரசி என்பதைவிட மக்களுக்கான இளவரசி என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இந்த உலகுக்கு மேகன் மாதிரியான பெண்களே சிறந்த முன்னுதாரணங்களாகத் திகழ்கின்றனர்” என்று தன் எண்ணத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

உலகப் பிரசித்தி பெறப்போகும் அந்த ராயல் வெடிங்கில் கலந்துகொள்ள எந்த உடையைத் தேர்வு செய்வது என்பதில் பிரியங்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். திருமணத்துக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அதில் அணிந்துகொள்ளவிருக்கும் உடையைத் தேர்வு செய்து முடிப்பதுதான் இப்போதைக்கு பிரியங்காவின் மிகப் பெரிய டாஸ்க்காக இருக்கிறது


Post a Comment

CAPTCHA
Refresh

*