By April 28, 20180 CommentsReport

வேகம் கூட்டும் கோலி சோடா 2..!!

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கோலி சோடா 2’ படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் மில்டன் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘கோலி சோடா’. பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க’ திரைப்படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி என்று சிறுவர் பட்டாளங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிவருகிறார் விஜய் மில்டன்.

சமுத்திரக்கனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்ஷா, கிருஷ்ணா, ரக்ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி ஏற்கெனவே கவனம் பெற்றிருந்த நிலையில் இரண்டாவது பாடலான ‘கிளம்பு’ பாடலை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (ஏப்ரல் 26) வெளியிட்டார். அச்சு இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். மணி அமுதவன் இந்தப் பாடலை எழுதியுள்ளார். தீபக், மகாலிங்கம், ஜிதின் ராஜ், சீரஜ் பாடியுள்ளனர்.

“ஆத்திரம் தலைக்கேறுதே தணலாகுதே தணியாமலே
என் வேட்டியில் உனக்கென்னடா வெண்சாமரம்

ஆயுதம் எடுப்பேனடா எதிர்ப்பேனடா எரிப்பேனடா

என் பாதையில் நீ வைப்பதா உன் கால்தடம்

தெரியும் தெரியும்… எதை எப்போது எந்நேரம் செய்கின்றதென்று

இனியும் இனியும்… செல்லாது நீ செய்யும் ராஜாங்கமே

கிளம்பு கிளம்பு கிளம்பு…”

பெரிய வீழ்ச்சிக்குப் பின் ஆக்ரோஷமாக எழுவதை உணர்த்தும் விதமாக இந்தப் பாடல் உருவாகியுள்ளது. பாடலில் சமுத்திரக்கனி, கௌதம் மேனன் பங்குபெறும் படப்பிடிப்புக் காட்சிகளை இணைத்துள்ளனர். இந்தப் படத்தை ரஃப் நோட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*