By April 28, 20180 CommentsReport

ரிலீஸுக்கு ரெடியான கௌதம் படம்..!!

கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர ஹர மஹாதேவகி படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்தப் படத்தின் டீசர் வெளியானபோதே பெரும் சலசலப்பை உருவாக்கியது. மேலும் டீசரைப் பார்த்தவர்கள் தணிக்கைத் துறை எந்தச் சான்றிதழை அளிக்கும் என்பதையும் அப்போதே யூகித்திருந்தனர். அதற்கேற்பவே படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்தது. தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தப் போராட்டத்தால் புதிய படங்கள் வெளியாகாமல் இருந்தது. தற்போது புதிய படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிட திரைப்பட இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் போட்டியிட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால், தயாரிப்பாளர்கள் சங்கம், எந்தத் தேதியில் சென்சார் செய்யப்பட்டதோ அதைப் பொறுத்து படங்களின் வெளியீட்டுத் தேதியை முறைப்படுத்தி வருகிறது. அந்தவகையில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துக்கு மே 4ஆம் தேதியைக் குறித்துத் தந்திருக்கிறது. இதையடுத்து இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் புது போஸ்டர் ஒன்றின் மூலம் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக தோல்விப் படங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த கௌதம் கார்த்திக்குக்கு ஹர ஹர மகாதேவகி படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அந்தப் படம் போன்று இரட்டை அர்த்த வசனங்கள் இன்னும் கூடுதலாகச் சேர்த்து உருவாகியிருக்கிருக்கும் படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்தப் படம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பது விரைவில் தெரிந்துவிடும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*