By April 30, 20180 CommentsReport

ஓவியா நெகிழ்ச்சியடைந்த காரணம் ..!!

ஓவியா தனது பிறந்தநாளை எப்போதும் இல்லாத வகையில் நேற்று கொண்டாடி முடித்திருக்கிறார். 25ஆவது வயதைக் கடந்திருக்கும் ஓவியா இதுவரை இப்படியொரு பிறந்தநாளைக் கொண்டாடியதில்லை என்று உருக்கமாகக் கூறியிருக்கிறார்.

ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு குறிப்பிட்ட ரசிகர்களால் மட்டுமே ரசிக்கப்பட்டவர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலராலும் ஆதரிக்கப்பட்ட ஒரு நபர். எனவே, அவருக்கான பிறந்தநாள் பரிசாகத் தங்களது வாழ்த்துக்களை எவ்வித பாரபட்சமும் பார்க்காமல் ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களின் மூலமாகவும், தனிப்பட்ட மெசேஜ் மூலமாகவும் கூறியுள்ளனர் அவரது நலம் விரும்பிகள்.

இதனால் நெகிழ்ச்சியடைந்த ஓவியா, நேற்று இரவு 12 மணி வரை ரசிகர்களுடன் ட்விட்டரில் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் ரசிகர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் சொன்ன ஒவியா, அதிக ரசிகர்களின் நெருக்கடிக்கு உள்ளான சமயத்தில் வீடியோ பதிலுக்கு மாறினார். ரசிகர் ஒருவர் “என் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். பிறகு உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன்” என்று கூறியதற்கு, “இல்லை நீங்கள் என்னை தொந்தரவு செய்ய வேண்டும்” எனத் தனக்கே உரிய ஸ்டைலில் பதில் கூறினார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*