By April 30, 20180 CommentsReport

மற்றவர்களுக்காக போலியாக வாழ்வது தனக்கு பிடிக்காது என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்..!!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்வருபவர் அனுஷ்கா. ‘பாகுபலி’ படத்துக்குப் பின் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகிவிட்டார் அனுஷ்கா. அந்தப் படத்திற்குப் பிறகு பிரதான கதாபாத்திரத்தில் நடித்த பாகமதி படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. எண்ணிக்கையில் குறைவான படங்களிலேயே நடித்தாலும் கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி நடித்துவருகிறார். அடுத்ததாக புதிய படங்களில் நடிக்க கதை கேட்டுவருகிறார்.

இந்நிலையில், எஸ்எம் தெலுங்கு டிவிக்கு பேட்டி அளித்துள்ள அவர், “எனது வேலை சினிமாவில் நடிப்பது. அந்த வேலையை சரிவர செய்துவருகிறேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் எனக்குப் பிடித்தது போல் இருப்பேன். நான் எப்பொழுதும் சொந்த வாழ்க்கைக்கும் சினிமா தொழிலுக்கும் இடையே ஒரு கோடு போட்டு வைத்திருக்கிறேன். இரண்டையும் ஒன்றாக நான் சேர்க்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

“சினிமாவுக்குள் நுழைந்த புதிதில் பலரும் நீ நடிகையாகிவிட்டாய். இனிமேல் பொது இடங்களுக்கு சாதாரண பெண்ணாகச் செல்லாமல் மேக்கப் போட்டு நல்ல ஆடைகளை உடுத்திக்கொண்டு செல் என்று அறிவுரை கூறினார்கள். நானும் அவர்கள் சொன்னது போல் மேக்கப் போட்டுக்கொண்டு சென்றேன். ஆனால் அது எனது உண்மையான சுபாவத்துக்கு முற்றிலும் எதிராக இருந்தது. அதனால் அதைத் தொடர்ந்து செய்யவில்லை , மீண்டும் எனக்குப் பிடித்த மாதிரி உடை அணிந்து செல்ல ஆரம்பித்தேன். வாழ்க்கையில் பிடித்தது போல் இருக்க வேண்டும். மற்றவர்களுக்காக போலியாக வாழ்வது எனக்குப் பிடிக்காது” என்று தன் எண்ணத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார் அனுஷ்கா.


    Post a Comment

    CAPTCHA
    Refresh

    *