சுசி லீக்ஸ்: கோபத்தில் சின்மயி..!!

ஆபாச வார்த்தைகளைப் பேசி சிலர் தன்னைத் தொந்தரவு செய்வதாக பிரபல பின்னணிப் பாடகி சின்மயி குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பின்னணிப் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் தனுஷ், டி.டி, ஹன்சிகா, த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ராணா, ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி கோலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் பாடகி சின்மயியின் புகைப்படங்களும் அடங்கும். இதையடுத்து “தன்னுடைய கணக்கிலிருந்து சில புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின. அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை. அக்கவுன்ட்டை ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதோடு சுசி லீக்ஸ் பிரச்சினையும் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், சுசி லீக்ஸ் விவகாரத்தை முன்வைத்து இளைஞர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி தன்னைத் தொந்தரவு செய்துவருவதாக பாடகி சின்மயி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘சுசி லீக்ஸ் மூலம் நீ எப்படிப்பட்டவள் என்பது தெரிந்துவிட்டது, மிகவும் நல்லவள் மாதிரி நடிக்க வேண்டாம்’ எனக் கூறி ஆபாச வார்த்தைகளால் பேசிய அந்த இளைஞர் குறித்த தகவல்களுடன் புகைப்படத்தையும் சின்மயி பகிர்ந்துள்ளார்.

மேலும் அவரது பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “சுசி லீக்ஸால் பாதிக்கப்படுவதைவிட, திரைத் துறையில் இருப்பவர்களால் பாதிக்கப்படுவதைவிட, உங்களைப் போன்றவர்களால்தான் அதிக அளவில் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்” என்று தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*