அஜித் பிறந்த நாள்: பிரபலங்களின் வாழ்த்து..!!
தமிழ்த் திரையுலகில் சிறு சிறு கதாபாத்திரங்களிலிருந்து தன்னுடைய விடாமுயற்சியினாலும் தன்னம்பிக்கையினாலும் படிப்படியாக உயர்ந்து தற்போது முன்னணி நடிகராக வலம்வருபவர் அஜித்.
இளம் நடிகர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் அஜித்திற்குத் தமிழகம் முழுவதுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சினிமா துறையிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவருடைய 47ஆவது பிறந்த நாளான இன்று (மே 1) அஜித்திற்கு, ரசிகர்களும் திரை பிரபலங்களும் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
விஜய் சேதுபதி
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் ஸார், ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்க. தொடர்ந்து முன்னுதாரணமாக இருங்கள்.
தனுஷ்
அஜித் அவர்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு உங்களுக்கு பிளாக்பஸ்டர் வருடமாக அமையட்டும்!
சிவகார்த்திகேயன்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எங்கள் தல அஜித் ஸார்.
மோகன் லால்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அஜித் குமார்
நிவின் பாலி
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல!
த்ரிஷா
நல்ல சிந்தனை, அழகான மனிதருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
காஜல் அகர்வால்
என்னுடன் நடித்த நடிகர்களில் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர் அஜித். அற்புதமான நடிகர் அஜித்திற்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்!
வரலட்சுமி சரத்குமார்
நான் சந்தித்த அழகான, பண்புள்ள அஜித் ஸாருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
டி.இமான்
பொன் போன்ற இதயம் உள்ள மனிதர் அஜித்திற்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் படத்தில் பணிபுரிவதில் மிகவும் மகிழ்ச்சி!
பார்வதி நாயர்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் ஸார். பத்திரிகையை சந்திப்பதில்லாமல், ஊடக வெளிப்பாடு இல்லாமல் இருக்கிறீர்கள். உங்களிடம் ஒரு மேஜிக் உள்ளது. அதனால்தான் இவ்வளவு அன்பான ரசிகர்கள் உங்கள் வசம் உள்ளார்கள்.