யோகி பாபு அடித்த செஞ்சுரி..!!

Actor Yogi Babu @ Kirumi Movie Audio Launch Photos

தனித்துவமான நடிப்பு மற்றும் உடல் மொழி மூலம் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர் நடிகர் யோகி பாபு. ஒரு சில நடிகர்கள் திரையில் தோன்றினாலே ரசிக்கத் தோன்றும். யோகி பாபுவிற்கும் அதில் இடமுண்டு. சுப்ரமணிய சிவா இயக்கிய யோகி திரைப்படத்திற்கு முன் பல படங்கள் நடித்திருந்தாலும் யோகி திரைப்படமே சிறந்த அறிமுகமாக அமைந்ததால் தன் பெயரை யோகி பாபு என மாற்றிக்கொண்டார்.

தொடர்ந்து கலகலப்பு, காக்கா முட்டை, பட்டத்து யானை, மான் கராத்தே, யாமிருக்க பயமே, ரெமோ உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. யோகி பாபு ஒரு காட்சியில் இருந்தால் போதும் என்று பல இயக்குநர்கள் அவரை அணுகிவருகிறார்கள். எல்லா இயக்குநர்களுக்கும் தேவையான காமெடி நடிகராக உயர்ந்துள்ளார்.

தற்போது விஜய்யின் 62ஆவது படத்தில் நடித்துவருகிறார். இதற்கு முன்பு மெர்சல் திரைப்படத்தில் சிறிய காமெடி ரோலில் நடித்திருந்தார். இவர் அடுத்ததாக சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு மே 7ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இப்படம் யோகி பாபுவுக்கு 100ஆவது படம் என்பதை அறிந்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைச் சமூக வலைதளங்களில் தெரிவித்துவருகின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*