மௌனம் கலைத்த பிக் பாஸ் நடிகை..!!

பிக் பாஸ் நிகழ்ச்சி எந்தளவுக்கு பொழுதுபோக்கைக் கொடுக்கிறதோ, அதே அளவுக்கு மன சங்கடங்களையும் கொடுக்கவல்லது. உள்ளே நடைபெறும் அனைத்தையும் மக்கள் பார்ப்பார்கள். அதில் பல மணிநேரங்கள் எடிட் செய்யப்படும். ஆனால், அதில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட எதைக் குறித்தும் பிக் பாஸைத் தாண்டிப் பேசக் கூடாது எனும் விதிமுறை, அதில் கலந்துகொண்டவர்களின் வாயைக் கட்டிப்போட்டுவிடுகிறது. என்றாலும், அதையும் மீறிச் சில சமயம் சிலர் பேசத்தான் செய்கிறார்கள். அப்படித்தான் பாலிவுட்டில் நடைபெற்ற பிக் பாஸ் 11ஆவது சீசனில் வென்ற நடிகை ஷிப்பா ஷிண்டே தற்போது பேசியிருக்கிறார்.

பிக் பாஸ் 11ஆவது சீசன் டைட்டிலை வென்ற ஷில்பா ஷிண்டே, இந்த வெற்றி தனக்கு ஒரு கனவு போல் இருந்ததாகக் கடைசி நாளன்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்தக் கனவு அவரை அதன் பிறகு தூங்கவே விடாத ஒன்றாக மாறும் என்று நினைத்திருக்க மாட்டார். அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விகாஸ் குப்தாவும், ஷில்பாவும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். எனவே, வழக்கம்போல அவர்களுக்கிடையே காதல் என்ற வதந்தி கிளம்பியது. இந்த வதந்தி குறித்தும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அவர்கள் நெருங்கிப் பழகிய சூழல்கள் குறித்தும் எதுவும் பேசாமல் இருந்த ஷில்பா, நெட்டிசன்கள் தங்களது எல்லையைத் தாண்டி தனிப்பட்ட வீடியோக்களைத் தயார் செய்து ஷில்பாவுக்கு நேரடி மெசேஜ்களாக அனுப்பத் தொடங்கியதால் மௌனம் கலைத்து பதில் சொல்ல முன்வந்திருக்கிறார்.

“நீங்கள் எனக்கு அனுப்பிய வீடியோ மெசேஜ் எல்லாவற்றையும் பார்த்தேன். நீங்கள் கடின உழைப்பை அதில் செலுத்தியிருக்கிறீர்கள் என அவற்றைப் பார்க்கும்போதே தெரிகிறது. ஆனால் என் இனிய ரசிகர்களே நீங்கள் நினைப்பதுபோல எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் இல்லை. நாங்கள் எதிரிகளும் இல்லை; நண்பர்களும் இல்லை. பிக் பாஸ் 11 மூலமாக நல்லதொரு பயணத்தை இருவரும் செய்தோம். அத்துடன் எல்லாம் முடிந்துவிட்டது. இனி எதிர்காலத்தில் ஒன்றிணைந்து பணிபுரிவோமா என்பதைச் சொல்ல முடியாது” என்று கூறியிருக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*