செயல்’ ஹீரோவின் அடுத்த படம்..!!

செயல் படத்தைத் தொடர்ந்து ராஜா தேஜேஸ்வர் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் சாய் சங்கர் இயக்குகிறார்.

விஜய் நடித்து வெளியான ஷாஜகான் படத்தை அடுத்து, இயக்குநர் ரவி அப்புலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் செயல். சி.ஆர்.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் சி.ஆர்.ராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாகவும், தருஷி நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ரேணுகா, முனிஸ்காந்த், ‘சூப்பர்குட் ஃபிலிம்ஸ்’ சுப்பிரமணியம், வினோதினி, ‘ஆடுகளம்’ ஜெயபாலன், தீனா ஆகியோரும் நடித்துள்ளனர்.

​இப்படம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ள கதாநாயகன் ராஜன் தேஜேஸ்வர், ‘‘எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக வெறியாக மாறியது. அந்த நேரத்தில் இயக்குநர் ரவி அப்புலுவை சந்தித்தபோது அவர் ஒரு கதையைச் சொன்னார். எனக்கு எந்த மாதிரியான கதையில் நடிக்கணும்னு ஆர்வம் இருந்ததோ அதற்கு ஏற்ற மாதிரியான கதையாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

“விஜய்யை வைத்து ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி அப்புலு 14 வருடங்களுக்குப் பிறகு அடுத்ததாக இயக்குகிற இரண்டாவது படத்தில் நான் நடிக்கும் பாக்யம் கிடைத்தது. இந்தப் படத்தில் எனக்கு ஆக்‌ஷன், காமெடி, லவ் என மூன்றுமே இருக்கும். முதல் படத்திலேயே பக்கா கமர்ஷியல் கதை கிடைத்திருக்கிறது. யானை பலம் கொண்ட ஒருவனை சாதாரண சராசரியான ஒருவன் மோதி சாய்ப்பதுதான் கதை. அடுத்ததாக சமுத்திரகனி உதவியாளர் சாய் சங்கர் இயக்கத்தில் ’குமாரு வேலைக்கு போறான்’ என்ற படத்தில் நடிக்கிறேன். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.

இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்க, வி.இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் இந்த மாதம் 18 ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*