ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா..!!

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி இடத்தில் இருப்பவர் அனுஷ்கா. ‘பாகுபலி-2’க்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான ‘பாகமதி’ படமும் தெலுங்கில் வெற்றி படமாக அமைந்தது. நல்ல வசூலையும் கொடுத்தது.

இதன்பிறகு புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை. பாகுபலி நாயகன் பிரபாசுக்கும் இவருக்கும் திருமணம் என்று அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அனுஷ்காவின் குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. என்றாலும், இவரை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் தயாராக இருக்கிறார்கள். ஆனால், சமீபகாலமாக புதிய படங்களில் நடிப்பதில் அனுஷ்கா ஆர்வம் காட்டவில்லை.

இந்த நிலையில், அனுஷ்கா ஆன்மீக சுற்றுப்பயணம் சென்று இருக்கிறார். கேதார்நாத் கோவிலுக்கு அவர் சென்ற புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இந்த சுற்றுப்பயணம் குறித்து அவர் தனது பேஸ்புக், டுவிட்டரில் எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால், அனுஷ்கா நெற்றி நிறைய திருநீறு பூசி, குங்குமம் வைத்து ருத்ராட்ச மாலை அணிந்து அடையாளம் தெரியாத அளவு பக்தையாக மாறி இருக்கும் படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*