இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடிக்க ஆசைப்பட்ட விஷால்..!!
விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் `இரும்புத்திரை’ படம் வருகிற 11-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். அர்ஜூன் வில்லனாக நடித்திருக்கிறார்.
டெல்லி கணேஷ், கோபி, ரோபோ ஷங்கர், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் சமூகத்தின் முக்கிய பிரச்னை ஒன்றை மையப்படுத்தி உருவாகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விஷால் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
அர்ஜுன் வில்லனாக நடித்தது எப்படி? என்பது பற்றி டைரக்டர் மித்ரனிடம் கேட்டபோது:-
‘‘முதலில், இந்த படத்தை வேறு ஒரு கதாநாயகனை வைத்து எடுப்பது என்றும், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பது என்றும் முடிவு செய்திருந்தோம். விஷாலிடம் கதை சொன்னபோது, ‘‘அந்த வில்லன் வேடத்தில் நானே நடிக்கிறேன்’’ என்றார். அவ்வளவு கனமான வேடம், அது.
நான்தான் விஷாலை வற்புறுத்தி கதாநாயகனாக நடிக்க வைத்தேன். சமந்தா கதாபாத்திரம் பற்றி இப்போது கூற முடியாது. ‘சஸ்பென்ஸ்’ ஆன கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.
சமூக வலைதளங்களினால் ஏற்படும் பாதிப்பை பற்றி பேசும் படம், இது.’’ என்றார். #Irumbuthirai #Vishal