ஓவியாவுக்காக சிம்பு பாடிய பாடல்..!!

சிம்பு, ஓவியா முதன்முறையாக இணைந்து பணியாற்றும் படத்திற்கு இசையமைப்பதோடு பாடல் ஒன்றையும் பாடியுள்ளார் சிம்பு.

தமிழில் பல படங்களில் கதாநாயகியாக நடித்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஓவியா. தற்போது விஷ்ணுவின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ராகவா லாரன்ஸின் ‘முனி 4’ (காஞ்சனா 3), விமலின் ‘K2’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துவருகிறார் .

இதனையடுத்து அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா ஆகியோரைப் போன்று கதாநாயகியை மையமாகக் கொண்ட கதையைத் தேர்ந்தெடுத்து ஓவியா நடித்துவரும் படம் 90 எம்எல். குளிர் 100 டிகிரி படத்தை இயக்கிய அனிதா உதீப் இந்தப் படத்தை இயக்குகிறார். சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்தைத் தொடர்ந்து சிம்பு இதில் இசையமைப்பாளராகப் பணியாற்றிவருகிறார்.

சக்க போடு போடு ராஜாவில் யுவன், டி.ராஜேந்தர் என ஒவ்வொரு பாடலுக்கும் வித்தியாசத்தைச் செய்துகாட்டி ய சிம்பு இதில் தானே இசையமைத்துப் பாடியிருக்கிறார். காதல் கடிக்குது எனத் தொடங்கும் இந்த பாடல் உருவான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்தப் பாடல் காதலின் தனிமையை விவரிக்கிறது. வீடியோவின் இறுதியில் பேசியுள்ள சிம்பு, விரைவில் இந்தப் பாடல் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஓவியாவின் படத்திற்காக சிம்பு இசையமைத்துப் பாடியிருப்பதால் அந்தப் பாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*