ஐஸ்வர்யாவுக்கு இருந்த தயக்கம்: அபிஷேக்..!!

ஐஸ்வர்யா ராய் குழந்தை பெற்ற பிறகு மீண்டும் நடிக்கத் தயங்கியதாக அவரது கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.

காதல் திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இப்போது ஐஸ்வர்யா ராய் அதிகப் படங்களில் நடித்துவருகிறார். அபிஷேக் பச்சனுக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளது. இருவருக்கும் சமீப காலமாக நல்ல புரிதல் இல்லை என்றும், வீட்டில் தனித்தனியாக வசிக்கிறார்கள் என்றும் தகவல்கள் வந்தன.

ஐஸ்வர்யா ராயுடன் மாமியார் ஜெயா பச்சனும் அடிக்கடி தகராறு செய்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் கைகோர்த்தபடி ஜோடியாகக் கலந்துகொண்டு எங்களுக்குள் தகராறு எதுவும் இல்லை என்பதை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் குழந்தை பெற்ற பிறகு மீண்டும் நடிக்கத் தயங்கியதாக அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.

இது குறித்து பாலிவுட் செய்தி நிறுவனங்களிடம் பேசிய அபிஷேக், “ஆராத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராய்க்கு சினிமாவில் தொடர முடியுமா என்ற தயக்கம் ஏற்பட்டது. முன்பு போல் என்னால் மீண்டும் நடிக்க முடியுமா, ஏற்கனவே விட்ட இடத்தைத் திரும்பவும் பிடிக்க முடியுமா, பாராட்டுகள் கிடைக்குமா என்றெல்லாம் சந்தேகங்களைக் கிளப்பினார். நான் இரண்டு ஆண்டுகள் நடிக்காமல் இருந்தேன். ஐஸ்வர்யா ராயும், எனது பெற்றோர்களும் எனது உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆதரவாக இருந்தார்கள். இப்போது எந்த விதத் தயக்கமுமின்றி நானும் ஐஸ்வர்யாவும் தொடர்ந்து நடித்துவருகிறோம்” என்று கூறியுள்ளார்


Post a Comment

CAPTCHA
Refresh

*