விஷாலை மிஞ்சுவாரா அர்ஜுன்?..!!

விஷால், சமந்தா, அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இரும்புத்திரை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

விஷால், சமந்தா நடிப்பில் புதுமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கும் படம் இரும்புத்திரை. இதில் வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றதையடுத்து படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவே விஷால் ஆசைப்பட்டதாகக் கூறினார். ஆனால் அந்த கதாபாத்திரம் அர்ஜுனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, விஷாலை விட அர்ஜுனுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளும் அமைந்திருக்கின்றன.

ராணுவ வீரரான விஷால் சமூகத்தில் நடக்கும் குற்றச்செயல்களைத் தண்டிப்பவராகவும் நடித்திருக்கிறார். சைபர் க்ரைம் முறையில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவராக அர்ஜுன் நடித்திருக்கிறார். இந்த குற்றச்செயல்கள் எப்படி நடக்கின்றன எனப் புரியாமல் குழம்பும் விஷாலுக்கு ஆதார் என்கிற க்ளூ கிடைக்கிறது. எனவே, ஆதார் மூலம் அர்ஜுன் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை விஷால் கண்டுபிடித்து அவரை அழிப்பதே கதையாக இருக்குமென ட்ரெய்லரைப் பார்க்கையில் தெரிகிறது.

விஷாலை விட அர்ஜுன் கேரக்டர் பலமானதால் விஷாலை மிஞ்சுவாரா அர்ஜுன் என்பதுதான் இப்போது கேள்வி.


Post a Comment

CAPTCHA
Refresh

*