கஸ்தூரி ராஜா படத்தில் பாலிவுட் நடிகர்..!!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கஸ்தூரி ராஜா இயக்கும் புதிய படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

இயக்குநர் பாரதிராஜாவின் வழித்தோன்றலாக கிராமப்புறம் சார்ந்து பல படங்களைத் தந்து வெற்றி கண்டவர் கஸ்தூரி ராஜா. என் ராசாவின் மனசிலே, நாட்டுப்புறப்பாட்டு, வீரத்தாலாட்டு, கரிசக்காட்டுப் பூவே என ஹிட் படங்களைத் தந்தவர், தனது மகன் தனுஷை வைத்தும் துள்ளுவதோ இளமை படத்தையும் கொடுத்தார். இவருடைய இயக்கத்தில் கடைசியாக 2006ஆம் ஆண்டு இது காதல் வரும் பருவம் வெளியானது. இதனையடுத்து தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாண்டி முனி என்ற பெயரில் படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

தமிழில் ஆரண்யகாண்டம், கோச்சடையான், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இதில் அகோரி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு குரங்கணி, திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள ஜவ்வாது மலை, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற இடங்களில் நடைபெறவிருக்கிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*