நாய்க்குட்டி மீது பொறாமைப்பட்ட பார்த்திபன்..!!

திரைப்படத் துறையில் வித்தியாசமான முயற்சி என்பது மிகவும் முக்கியம். அப்படி ரசிகர்களால் இவர் மிகவும் வித்தியாசமானவர் என்று பேசப்படுபவர் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்.

இவரது நடிப்பைத் தாண்டி பேச்சும் வெகுவாக ரசிக்கப்படுகிறது. இவரது மகள் கீர்த்தனா 2002ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது மனதிலும் இடம்பிடித்தார். கடந்த மார்ச் 8ஆம் தேதி கீர்த்தனாவுக்கும், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய்க்கும் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நடிகர் பார்த்திபன், தனது மகள் கீர்த்தனா நாய்க்குட்டியின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடும் வீடியோ ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “அடுத்த ஜென்மத்தில என் பொண்ணு வளர்க்கிற நாய்க்குட்டியா பொறக்கணும். எனக்கு வந்த பொறாமையை ஏன் கேக்குறீங்க?” என்று பதிவிட்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*