இந்தி ரசிகர்களையும் கவர்ந்த பிரியா வாரியர்..!!

‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம் பெற்ற ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்களைக் கவர்ந்த பிரியா வாரியர், இந்தி பாடல் ஒன்றைப் பாடி இந்தி சினிமா ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார்.

ஒரு அடார் லவ் என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்ற ஒரே பாடல் மூலம் உலகப் புகழ்பெற்றவர் இளம் நடிகை பிரியா வாரியர். அந்தப் பாடல் காட்சியில் இடம்பெற்ற பிரியா வாரியரின் கண் அசைவுகள், முக பாவனைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. வார்த்தைகள் ஏதுமின்றி நளினத்துடன் அவர் புருவங்களை அசைத்து தமிழ் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். தற்போது இந்தி பாடல் ஒன்றைப் பாடி பாலிவுட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

அவருடைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ஹிட்டடித்து வருகிறது. தனது நண்பரின் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார் பிரியா வாரியர். அப்போது நண்பர்களுடன் இணைந்து ‘ஹவா ஹவா’ என்னும் இந்தி பாடலை பாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக இவரும், இவரது இணை நடிகர் ரோஷனும் இணைந்து வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*