ரூ. 173 கோடி பங்களாவுக்கு சொந்தக்காரரான சோனம் கபூரின் கணவர் என்ன செய்கிறார் தெரியுமா?..!!

நடிகை சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அஹுஜா என்ன செய்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலரான ஆனந்த் அஹுஜாவை நேற்று திருமணம் செய்து கொண்டார். அவர்களின் பிரமாண்ட திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஆனந்த் அஹுஜா என்ன செய்கிறார் என்பதை தெரிந்து கொள்க.

டெல்லி
ஆனந்த் அஹுஜா பிறந்து வளர்ந்தது எல்லாம் டெல்லியில் தான். அவர் வசிக்கும் பகுதியில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கிறார்கள். ஆனந்தின் பங்களாவின் விலை ரூ. 173 கோடி ஆகும்.

பங்களா
ஆனந்த் அஹுஜாவின் தாத்தா ஹரிஷ் ரூ. 173 கோடி கொடுத்து அந்த பங்களாவை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார். அந்த பகுதியில் வசிக்கும் அனைவருமே பிரபலங்கள் தான்

தனி வீடு
அவ்வளவு பெரிய பங்களா இருந்தும் ஆனந்த் அங்கு வசிக்கவில்லை. அவர் டெல்லியில் உள்ள கோல்ப் லிங்க்ஸ் பகுதியில் வசிக்கிறார். ஆனந்தின் தாத்தா ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். இந்த வியாபாரம் போக ஆனந்த் பானே என்ற ஃபேஷன் டிசைனர் உடைகளை விற்று வருகிறார்.

அமெரிக்கா

ஷாஹி எக்ஸ்போர்ட்ஸின் மேனேஜிங் டைரக்டராக இருக்கும் ஆனந்த் அமெரிக்காவில் உள்ள வார்டன் பிசினஸ் ஸ்கூலில் படித்தவர். படித்து முடித்த உடன் அவர் சில காலம் பெனிசில்வேனியாவில் உள்ள வங்கி ஒன்றில் வேலை பார்த்தார். அவருக்கு சைக்கிள் ஓட்டுவது, கூடைப்பந்து ஆடுவது என்றால் மிகவும் பிடிக்கும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*