இடியாப்ப சிக்கலில் வடிவேலு: ரூ. 9 கோடி நஷ்டஈடு கேட்கும் ஷங்கர்..!!
ரூ. 9 கோடி நஷ்ட ஈடு கொடுக்குமாறு வடிவேலுவிடம் 24ம் புலிகேசி படக்குழு கேட்டுள்ளது.
23ம் புலிகேசி படம் ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை 24ம் புலிகேசி என்ற பெயரில் எடுக்க திட்டமிட்டனர். சிம்புதேவன் இயக்க இயக்குனர் ஷங்கர் தயாரித்தார்.
முதல் பாகத்தை போன்றே இரண்டாம் பாகத்திலும் வடிவேலு ஹீரோவாக நடிக்கத் துவங்கினார்.
வடிவேலு
ரூ. 6 கோடி செலவில் செட் போட்டு படப்பிடிப்பு நடந்தது. 10 நாட்கள் நடித்த பிறகு வடிவேலுவுக்கும், சிம்புத்தேவனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து வடிவேலு படத்தில் இருந்து விலகினார்.
விளக்கம்
வடிவேலு படத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து படக்குழு அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது. இது குறித்து வடிவேலுவிடம் விளக்கம் கேட்க அவரோ, தான் எந்த பிரச்சனையும் செய்யவில்லை என்றும், படப்பிடிப்பை தொடங்க தாமதம் செய்ததால் தனக்கு பொருளாதார இழப்பும், மனஉளைச்சலும் ஏற்பட்டதாகவும், அதனால் படத்தில் நடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
முடக்கம்
24ம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு முடங்கிப் போயுள்ளது. இதற்கிடையே செட்டையும் பிரித்துவிட்டார்கள். தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் பேசியும் வடிவேலு அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
நஷ்டஈடு
24ம் புலிகேசி படத்தை கைவிடுவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள். இந்நிலையில் வடிவேலுவிடம் இருந்து ரூ. 9 கோடி நஷ்டஈடு வாங்கித் தருமாறு படக்குழு தயாரிப்பாளர் சங்கத்திடம் தெரிவித்துள்ளது.