தனுஷுடன் பிறந்தநாள் கொண்டாடிய சாய் பல்லவி..!!

பிரேமம் படத்தின் மூலம் கவனம்பெற்ற நடிகை சாய் பல்லவி, தனுஷ் உள்ளிட்ட படக் குழுவினருடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

பிரேமம் படத்தின் மூலம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் சாய் பல்லவி. அதன் பின்னர் ஃபிடா படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்தவர், தமிழில் இயக்குநர் விஜய்யின் கரு படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படங்களுக்குப் பிறகு தமிழின் முன்னணி நடிகர்களான தனுஷ், சூர்யா ஆகியோரின் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது தனுஷின் மாரி 2 படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவருகிறார் சாய் பல்லவி. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்தப் படக்குழுவினருடன் நேற்று (மே 9) கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார். மேலும் தனுஷ் உள்ளிட்ட படக் குழுவினர் பலரும் சாய் பல்லவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி மகிழ்வித்தனர்.

சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தெலுங்கில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கும் ‘படி படி லே சே மனசு’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*