நீட் ஆடை கட்டுப்பாடு : சின்மயி..!!

நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள் பல்வேறு விஷயங்களுக்கு மத்தியில், மெட்டல் இல்லாத உள்ளாடைகளையும் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்பது ஏன் என விளங்கவில்லை என்று பாடகி சின்மயி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மே 6ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து நீட் தேர்வை எழுதி முடித்தனர். தேர்வு எழுத சென்ற மாணவர்கள் சோதனை என்ற பெயரில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியதாகவும் புகார் எழுந்தது.

நீட் தேர்வு எழுதிய கேரள மாணவி சாய்ரா, சோதனை என்ற பெயரில் தனது உள்ளாடையை அகற்ற அதிகாரிகள் நிர்ப்பந்தித்தாக புகார் கூறினார். அதில், “சோதனையின் போது மேல் உள்ளாடைகளைக் கழற்றுமாறு சோதனையாளர்கள் கூறினார்கள். எனது ஆடையில் மெட்டல் இருப்பதாக அதிகாரிகள் சந்தேகித்தார்கள். எனக்கு உள் ஆடை கழற்ற ஒருமாதிரியாக இருந்தது. பின்னர் கழற்றினேன்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாடகி சின்மயி, “நீட் தேர்வு சோதனைகள் மிக அபத்தமானதாக இருக்கிறது. நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள் பல்வேறு விஷயங்களுக்கு மத்தியில், மெட்டல் இல்லாத உள்ளாடைகளையும் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்பது ஏன் என விளங்கவில்லை. பீகார் போன்ற மாநிலங்களில் மாணவர்கள் செய்யும் மோசடிதான் இந்த அபத்தமான சோதனைகளுக்கு காரணம் எனக் கருதுகிறேன். அந்த மாணவர்களை மட்டும் முன் உதாரணமாக வைத்து இவர்கள் அனைத்து மாணவிகளின் உள்ளாடைகளையும் சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். மோசமான சிபிஎஸ்இ நிர்வாகம். கடந்தகால மோசமான தேர்வு மோசடிகளை வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர்” எனப் பதிவிட்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*