த்ரில்லர் கதையில் ராதிகா..!!

த்ரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகும் எம்பிரான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் ராதிகா பிரீத்தி.

தடையற தாக்க, மீகாமன் போன்ற வெற்றிப் படங்களைத் தந்த மகிழ்திரு மேனியிடம் உதவியாளராக இருந்தவர் இயக்குநர் கிருஷ்ண பாண்டி. தற்போது இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எம்பிரான். இப்படத்தில் விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் நடித்த ரேஜித் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பெங்களூருவைச் சேர்ந்த ராதிகா பிரீத்தி நடிக்கிறார். மௌலி, கல்யாணி நடராஜன் எனப் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இப்படத்தைப் பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் மூன்று பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். யாகாவாராயினும் நா காக்க படத்திற்கு இசையமைத்த பிரசன் பாலா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். புகழேந்தி ஒளிப்பதிவு செய்ய, மனோஜ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

த்ரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோவா, பாண்டிச்சேரி மற்றும் ஹைதராபாத்தில் நடந்துமுடிந்துள்ளது. தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. படத்தை ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*