பாஸ்கர் ஒரு ராஸ்கல்: அரவிந்த் சாமி வருத்தம்..!!

அரவிந்த் சாமி நடிப்பில் இன்று வெளியாகவிருந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் மீண்டும் தள்ளிப்போயுள்ளது.

அரவிந்த் சாமி, அமலா பால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோர் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். இன்று வெளியான இரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம் ஆகிய திரைப்படங்களோடு இந்தப் படமும் வெளியாகவிருந்தது. ஆனால் திடீரென்று இரவு 11 மணிக்கு மேல் பாஸ்கர் ஒரு ராஸ்கல் நாளை வெளியாகாது என அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர், “பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கவில்லை. முன்பதிவு செய்த பிறகும் மீண்டும் வெளியீடு தள்ளிப்போனதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. என் வருத்தத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துக்கொள்கிறேன். நான் படக்குழுவினருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் எப்போதும் உறுதுணையாகவே இருந்திருக்கிறேன். உங்களைப் போன்றே நானும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தேன். இனி ஒருபோதும் ரிலீஸ் தேதியை அறிவிக்கமாட்டேன். அனைவருக்கும் மகிழ்ச்சியளிப்பதோடு குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக இருக்கும். இந்தப் படம் தவிர்த்து வெளியாகும் மற்ற படங்கள் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்” என்று தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

இதோடு இந்தப் படம் 5 முறை தள்ளிப்போயுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 12ஆம் தேதியும், மார்ச் 29ஆம் தேதியும், ஏப்ரல் 27ஆம் தேதியும், மே 11ஆம் தேதியான இன்றும் வெளியாவதிலிருந்து தள்ளிப்போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*