கான் திரைப்பட விழாவில் தனுஷ்..!!

ஹாலிவுட்டில் நடித்த தனுஷ் இந்த ஆண்டின் கான் திரைப்பட விழாவில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்தி சினிமாவிலும் நடித்து இந்திய சினிமா ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ், ஹாலிவுட்டில் முதன்முறையாக நடித்திருக்கும் படம் தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆஃப் தி ஃபகிர். இந்தத் திரைப்படம் வெளியாகி வெளிநாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் கான் திரைப்பட விழா இந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தனுஷ் நடித்த படம் திரையிடப்படுகிறது. இதில் கலந்துகொள்ள துனுஷுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் நடைபெறும் கான் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தனுஷ் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்ததோடு, பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவைச் சேர்ந்த நடிகர் ஒருவர், கான் திரைப்பட விழாவில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*