விஜய் சேதுபதி: ஷூட்டிங் அப்டேட்..!!

விஜய் சேதுபதி – அருண்குமார் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கும் புதிய படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறவுள்ளது.

பண்ணையாரும் பத்மினியும் என்ற தனது குறும்படத்தை முழு நீளத் திரைப்படமாக உருவாக்கியவர் அருண்குமார். அதில் விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்து நடித்திருந்தனர். முதல் படம் கிராமப்புற பின்னணியில் இயக்கிய அருண், மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து வலுவான போலீஸ் கதையை ‘சேதுபதி’ திரைப்படம் மூலம் கொடுத்தார்.

தற்போது, இவர் இயக்கவிருக்கும் புதிய படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் கதாநாயகியாக அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளார். விவேக் பிரசன்னா, லிங்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் ‘ஒய்.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘கே புரொடக்ஷன்ஸ்’ ராஜராஜன் தயாரிக்கவுள்ளார். சமீபத்தில், படத்துக்கான பூஜை போடப்பட்டது. இதன் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பை வருகிற மே 25ஆம் தேதி முதல் தென்காசியில் தொடங்க உள்ளது. 20 நாள்கள் தொடர்ந்து படப்பிடிப்பு அங்கு நடைபெறவுள்ளது. இதையடுத்து மலேசியாவில் 35 நாள்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*