சிவகார்த்தியுடன் கரம் கோக்கும் சோனி நிறுவனம்..!!

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வரும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் புதிய படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சிவகார்த்திகேயனின் நண்பரும் பிரபல பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். தர்ஷன், சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மகளிர் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் சிறிய நகரத்திலிருந்து கிரிக்கெட் கனவுகளுடன் வளரும் பெண்ணாக ஐஸ்வர்யா வலம்வருகிறார். இதன் படப்பிடிப்பு திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடியில் நடைபெற்றது.

திபு நிணன் தாமஸ் இசையமைக்கும் இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதைத் தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*