தெலுங்கில் கவனம் செலுத்தும் காஜல்..!!
தமிழில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் காஜல் அகர்வால் தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்திவருகிறார்.
தெலுங்கு திரையுலகில் சர்வானந்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். சுதிர் வர்மா இயக்கும் இந்தப் பெயரிடப்படாத படத்தின் பூஜை கடந்த மாதம் 27ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் நடைபெற்றது. மெர்சல் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தில் காஜல் அகர்வாலும் நித்யா மேனனும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
நாக வம்சி தயாரிப்பில் பிரசாந்த் பிள்ளை இசையமைப்பாளராகப் பணியாற்றுகிறார். திவாகர் மணி ஒளிப்பதிவு செய்கிறார். ஜூன் 15ஆம் தேதி முதல் காஜல் படப்பிடிப்பில் இணையவுள்ளார்.
விஜய் நடிப்பில் தமிழில் வெளியாகி கவனம் பெற்ற ‘தெறி’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தில் ரவி தேஜா கதாநாயகனாக நடிக்கிறார். சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் காஜல் ஒப்பந்தமாகியுள்ளார். ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்தியில் வெற்றி பெற்ற ‘குயின்’ திரைப்படம் தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. காஜல் இதில் கதாநாயகியாக நடிக்கிறார். இது தவிர, காஜல் அகர்வால் தமிழில் புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை.