ஆண்களின் காதலுக்கு உதவும் நயன்தாரா?..!!

தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் பாடல் டீசர் வெளியாகி உள்ளது.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவரும் நயன்தாரா, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் கதாநாயகியை மையமாகக் கொண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். ஏற்கெனவே ‘எதுவரையோ’ பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றதை அடுத்து தற்போது ‘கல்யாண வயசு’ பாடலின் டீசரை வெளியிட்டுள்ளார் அனிருத்.

‘எதுவரையோ’ பாடலை விவேக் மற்றும் கௌதம் மேனன் ஆகிய இருவரையும் இணைந்து எழுத வைத்த அனிருத், இதில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என வளர்ந்திருக்கும் சிவகார்த்திகேயனை முதன்முறையாகப் பாடல் எழுத வைத்திருக்கிறார். ‘கல்யாண வயசு’ என்ற இரண்டாவது லிரிக்கல் வீடியோ மே 17ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில் இந்தப் பாடலின் டீசர் வெளியாகி உள்ளது.

இதில் வீடியோவில் யோகி பாபு, “வீட்டுக்குப் போனா யாரையாவது கல்யாணம் பண்ணிக்கச் சொல்ற அப்பா. அத்தைப் பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணணும்னு சொல்ற அம்மா. பேரக்குழந்தைகளைப் பார்க்கணும்னு சொல்ற பாட்டி. இந்த டார்ச்சர் எல்லாம் தாங்க முடியாம கடைக்கு வந்தா. என்னையே ஏக்கமாகப் பார்க்கிற பொண்ணுங்க. ஆனா, அவங்க எல்லார்கிட்டயும் ஒரே ஒரு பதில் தான் சொன்னேன். கட்டுனா அந்தப் பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணி கைப்பிடிப்பேன்னு. இதுவரைக்கும் அந்தப் பொண்ணை யார்கிட்டயும் சொல்லலை முதன்முறையாக உங்ககிட்ட சொல்றேன்” என நயன்தாராவிடம் பேசுகிறார். எனவே, ஆண்களின் காதல் கைகூடுவதற்கு நயன்தாரா உதவி செய்யும் விதமாக நடித்திருப்பார் என யூகம் எழுகிறது.

சிவகார்த்தி முதன்முறையாகப் பாடல் எழுதியிருப்பதால் அந்தப் பாடலுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*